உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ்பாண்டியன் கூறியதாவது: ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன்ஆகிய நான் உள்பட 4 பேரையும் பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினர். ஆனால் பொதுக்குழுவில் எங்களையும் கலந்து கொள்ளும்படி உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறி உள்ளது. ஒருங்கிணைந்த அதிமுகவே பன்னீர்செல்வத்தின் நோக்கம். இரட்டை இலை சின்னம் இன்றைக்கு எங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமானது தான். அவைத்தலைவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதன் மூலம் எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது.அதிமுகவில் எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்ற இரண்டு தரப்பு தான். வேறு தரப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறும்போது, எடப்பாடி சொல்வது போல நடப்போம் என்றார்.