அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர் தியாகராஜன் என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அண்ணாகாரன்பேட்டைக்கு செல்வதற்காக குலோத்துங்கன் இளஞ்சேரன் மற்றும் சிலர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குறுக்கே நடந்து சென்றுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக குலோத்துங்கன், இளஞ்சேரன் ஆகியோரை ஆற்றுத் தண்ணீர் இழுத்து சென்றது. அவர்களுடன் வந்த சிலர் மாயமான இருவரையும் தேடி உள்ளனர் கிடைக்காத நிலையில் இது குறித்து த.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் த.பழூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் இறந்து மிதந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
