கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியில் கூறியதாவது….
நம்முடைய தேவையை விட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. கோடைகாலத்தை சமாளிப்பதற்கு என்ன கூடுதல் தேவை ஏற்படுகிறதோ அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வெப்பத்தின் காரணமாக எங்கேயும் ஓரிடத்தில் பழுது ஏற்பட்டு இருந்தால், அதனை அதிமுகவும் பாஜகவும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாமா என்று பார்க்கிறார்கள். இன்றைய தினம் நடைபெறும் பாஜக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் குறித்தான கேள்வி- அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு அவர் பேசியதும் 2024 ஆம் ஆண்டு அவர் பேசியதும் என்னுடைய செல்போனில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு அவர் பேசும் பொழுது மதுவிலக்கு என்பதே சாத்தியமில்லை என்று கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு அவர் பேசும்பொழுது அவர்கள் வந்துவிட்டால் மதுவிலக்கு வந்து விடும் கடைகளை மூடி விடுவோம் என்று கூறுகிறார்கள். தயவுசெய்து அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே மாதிரி பேசுபவர்கள் கேள்விகளை கேட்கலாம். தொகுதி மறு வரையறை என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய அநீதியை ஏற்படுத்தும். அதாவது நம்முடைய குரல் டெல்லியில் ஒலிக்கும் பொழுது அந்தக் குரலை கேட்பதற்கு நபர்கள் இல்லாமல் போய்விடும். வாக்களித்தவர்களின் உரிமையை காப்பாற்றுகின்ற இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார். இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய ஆளுமை மிக்க தலைவராக இதனை முன்னெடுத்து இருக்கிறார். இதற்கு பிற மாநில அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று இவ்வாறு தெரிவித்தார்.