Skip to content

களத்திற்கு செல்ல தயங்க கூடாது…. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்…

தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று புதியதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஐடி விங் பிரிவு துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து, இன்று 3ஆம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை தவெக தலைவர் விஜய் நியமித்தார். கட்சி பணிகளை கவனிக்க மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இன்று 17 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  அரியலூர், ராணிபேட்டை ராமநாதபுரம், ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், கன்னியாகுமரி , காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தருமபுரி, திண்டுக்கல், தீருநெல்வேலி, திருப்பூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மயிலாடுதுறை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வகிகல் இதுவரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய பொறுப்பாளர்கள் நியமன கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்,  ” 2026 சட்டமன்ற தேர்தல் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் செய்கிறேன். நீங்களும் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள். யாரும் களத்தில் இறங்கி வேலை செய்ய தயங்க கூடாது. இனி மக்கள் மத்தியில் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட வேண்டும். ” என கட்சி புதிய நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!