Skip to content

என்னுடன் எடுத்த போட்டோவை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்… நடிகர் ராஜ்கிரண்…

  • by Authour

சினிவாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படம் தயாரிக்க போகிறேன், இந்த நடிகரை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி பணம் பறித்துக்கொண்டு பின்பு ஏமாற்றும் வேலை என்பது நடந்துவருவதை நாம் பல்வேறு குற்றச்சம்பவங்களில் பார்த்திருக்கிறோம்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே இப்படியான மோசடிகள் நடந்துவரும் நிலையில், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் நடைபெறும் மோசடிகள் என்பது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இந்த சூழலில் தன்னிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னுடைய உறவினர் என்றோ, என்னை தெரியும் என்றோ யாராவது ஏமாற்ற நினைத்தால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோசடி விவகாரம் குறித்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் ராஜ்கிரண், “நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது, சாதாரணமாக நடக்கும் விசயம்.

இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.

என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் போட்டோக்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு” என்று பதிவிட்டுள்ளார்.