சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் திரைப்படம் குறித்து முதலாவதாக கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை மீண்டும் சூட்டிங் நடைபெறவுள்ளது என கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன். ஆகையால் அரசியல் கேள்விகள் வேண்டாம் என கூறினார்.