திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது. இந்த விழாவுக்காக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஊர் தரப்பில் அழைக்க முடிவு செய்யததாக தெரிகிறது. இதற்காக திமுகவை சேர்ந்த ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றி செயலாளர் பழனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் சிலர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து இதற்காக அழைப்பு விடுத்தனர். மணப்பாறை தொகுதி, திமுகவின் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்டது என்பதால், அமைச்சரும் வருவதாக ஒத்துக்கொண்டு விழாவுக்காக தன்னுடைய பங்காக ரூ.10 ஆயிரம் நன்கொடை கொடுத்தாக கூறப்படுகிறது. கடந்த 29 ந் தேதி அப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர் மகேஸ் வந்தார். இதைத் தொடர்ந்து
கோயிலில் பூரண கும்பங்களுடன் கிராம மக்களுடன் திமுக நிர்வாகிகள் அமைச்சருக்காக காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வரவில்லை. இதனால் கோயில் நிர்வாகி்களும் ஊர்மக்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிலர் அமைச்சர் அவமதித்து விட்டார் என நிர்வாகிகளிடம் சத்தம் போட்டுள்ளனர். . இதன் எதிரொலியாக அமைச்சர் வரவில்லை அவர் கொடுத்த பணம் மட்டும் ஏன் நமக்கு எனவே அமைச்சர் கொடுத்த தந்த ரூ. 10, 000 நன்கொடை பணத்தை திருப்பி கொடுக்க கோயில் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து ரூ. 100 ஐ சேர்த்து ரூ. 10, 100 ஆக அமைச்சர் “P மகேஸ் பொய்யாமொழி, ஸ்கூல் எஜூகேஷன் மினிஸ்டர்” – என்று D D (862685)எடுத்து, சால்வைகள், பிரசாதம் இணைத்து அமைச்சருக்கே வழங்க கோரி சேர்மன் பழனியாண்டியிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.