Skip to content

திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ ஜெ நகர் பகுதியில் கடற்கரையோரம் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் நேரில் வந்து பார்வையிட்டார்.

சுமார் 4 அடி உயரம் 1 அடி அகலத்தில் 50 கிலோ எடை கொண்ட டால்பின் முகத்தில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அதை நேரில் ஆய்வு செய்த அவர் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு இந்த மீன் என்ன காரணத்திற்காக இறந்தது என்று ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு கடற்கரையில் இந்த டால்பின் புதைக்கப்படும். திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் டால்பின் வகையைச் சேர்ந்த மீன்கள் கிடையாது. மேலும் இந்த டால்பின் வகை மீன்கள் ஆழ்கடலில் வாழக்கூடியவை.

இந்த டால்பின் முகத்தில் காயம் இருப்பதால் மீன்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் இந்த மீன் இறந்திருக்கலாம் அல்லது பாறை மீது மோதி இந்த மீன் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!