திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டு சென்றது. முன்னதாக விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு ஆண் பயணியின் பேக்கில், 48,500 அமெரிக்க டாலர் இருந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 39,30,925. அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:டாலர் பறிமுதல்