தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 முதல்300 வரை வசூலிக்கப்படுகிறது. இப்போது சுங்கம் வசூலிக்கும் முறை பாஸ்ட்ராக் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. சுங்கம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் போராடி வருகிறது. சுங்ககேட் வசூல் மூலம் வருடத்திற்கு 40ஆயிரம் கோடி கிடைக்கிறது. இந்த நிலையில், வரும் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை பரனூர், வானகரம், சூரப்பட்டு நல்லூர் , திருப்பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கசாடிவகளிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.