கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகம் கடந்த 8ம் தேதி அன்று அந்த வணிக வளாகத்தில் இரண்டாவது மாடிக்கு நாய் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஊழியர்கள் இதனை தூக்கி அங்கு இருந்து வீசியதாகவும் , கூறப்படுகிறது. அதன் சி.சி.டி.வி கட்சியின் தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் கௌதம் என்பவர் அந்த நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார். படுகாயமடைந்த நாயை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதற்கு காலில் மட்டும் எலும்பு முறிவு எப்படி இருந்ததாக கூறினர். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாயில்லா ஜீவனை 2வது மாடியில் இருந்து தூக்கி வீசி அந்த நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது, இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை அடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளதாகவும், நாய் 2வது மாடியில் இருந்து தூக்கி வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.