வீட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிப்பது மிகவும் சவாலுக்கு உரியதுதான் அந்த வகையில் அவர்கள் எவ்வாறு தங்களது செல்ல பிராணி நாய்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.மேலும் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு இருக்கின்றது என்பதனை ஆராய செல்லப் பிராணிகளின் கண்காட்சியான “டாக் ஷோ” திருச்சி மொரய் சிட்டி பகுதியில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டு இன நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை இனங்களும் மற்றும் பிற வெளிநாட்டு வகை நாய்களான கிரேட் டேன், டால்மேசன், பாக்ஸர், ஜெர்மன் செப்பர்ட், புள் டாக், கிரெடவுன், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட
50க்கும் மேற்பட்ட நாய்கள் வகைகள் சுமார் 200க்கும் மேர்பாட்ட நாய்கள் தலை ஆளங்கரம் செய்தும் தலையில் க்ளிப், பூ அணிந்தும், பட்டு உடுத்தியும், காலணிகள் அணிந்தும் தலைக்கு தொப்பி மாட்டியும், டிப் டாப்பாக ஒய்யார நடை நடந்து வளப்பவர்களின் உத்தரவுக்கு கீழ் கட்டப்பட்டு தனது திறமைகளை காட்டி 15,000 10,000 , 5000 என பரிசுகளை தட்டிச் சென்றது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.
மேலும் ராபீஸ் நோய்களிலிருந்து தடுப்பது பிராணிகளை நல்ல முறையில் வளர்த்து பிறகு வயது முதிர்வில் வளர்த்த நாய்களை கைவிட கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வை இந்த கண்காட்சி உணர்த்தியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு நாய்கள் கண்காட்சி பார்வையிட்டார். தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை வளர்ப்பு நாய் அணி வகுப்பையும் பார்வையிட்டார்.