Skip to content

நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….

  • by Authour

அரக்கோணம் அருகே நாய் கடித்து ஒன்றரை மாதங்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் ஐந்து வயது குழந்தை நிர்மல்ராஜ், 27.6.2024 அன்று வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் சிறுவனின் வாய் பகுதியில் கடித்தது. இதன் காரணமாக சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஒன்றரை மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராபிஸ் நோயின் காரணமாக குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!