பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்ரமன். இவர் பெண் உடையில் சுற்றி வந்து குடியிருப்பில் உள்ளவர்களை அச்சுறுத்துவது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது கணவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வீடியோவை வெளியிட்டுள்ளதாக விக்ரமனின் மனைவி பிரீத்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள விக்ரமன் மற்றும் அவரது மனைவி பிரீத்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது திட்டமிட்டு இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளதாகவும்ம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சூட்டிங் ரிகர்சல் செய்யப்பட்டதாகவும், அதனை தவறாக சித்தரித்து தற்போது வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் பிரீத்தி தெரிவித்தார். மேலும் தற்போது வெளியாகி உள்ள வீடியோ எனது தயாரிப்பில் எடுக்கப்படும் திரைப்படத்திற்காக விக்ரமன் ரிகர்சல் செய்து பார்த்தபோது எதிர்பாராத விதமாக நடைபெற்ற பிரச்சனை. அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தவறாக நினைத்து பிரச்சினை செய்தார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அப்போதே சமரசம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிரஸ்டீஜ் குடியிருப்பில் நடைபெற்று வரும் பிரச்சனை காரணமாக திசை திருப்ப இந்த வீடியோ வெளியிட்டு இருப்பதாக பிரீத்தி தெரிவித்தார். எனவே வீடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.