கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். எமர்ஜென்சி கேஸ்கள் மட்டுமே டாக்டர்கள் இன்று பார்த்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மாணவ – மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மெழுகுவர்த்தி கையில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து வளாகத்திற்குள் அமைதி பேரணி நடைபெற்றது பின்னர் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் .
அதன் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம்.
இந்த நிலையிலே, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை தருவதில் தோய்வடைந்தன. மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை தந்து வருகின்றனர்.
தினமும் வரும் புறநோயாளி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையிலே, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை தருவதில் தொய்வடைந்தன.மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு எந்த தடையும்
இன்றி மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை தந்து வருகின்றனர்.தினமும் வரும் புறநோயாளி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடந்தனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கருப்பு பேடஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.இதனால் புறநோயாளிகளுக்கு இன்று அவர்கள் சிகிச்சை அளிக்காததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் திரும்பி சென்றனர்.
கோவை அரசு மருத்துவமனையிலும் இன்று டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். அவர்கள் பெண்டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம்.
இந்த நிலையிலே, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.நோயாளிகள் வெகுநேரம் காத்திருந்தனர். மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சைஅளித்தனர்.