Skip to content

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.

உயிர்காக்கும் சேவையான உன்னத பணியில் உள்ள மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக,
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324 C ,இந்திய மருத்துவ சங்கம்,நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக கோவையில் தேசிய மருத்துவர் தின விழா இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்றது.

உயிர்காக்கும் சேவையான உன்னத பணியில் உள்ள மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,தலைமை விருந்தினர்களாக பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்ட ஆளுநர் டாக்டர் நித்யானந்தம்,மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர் மருத்துவர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகாகவி பாரதி மண்டல தலைவரும்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய  செயலாளருமான செந்தில் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.,

இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவிக்குமார்,மாவட்ட தலைவர் டாக்டர் பிரியா கார்த்திக் பிரபு,மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு,மாவட்ட செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

சிறப்பு விருந்தினராக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா கலந்து கொண்டார்.

கவுரவ அழைப்பாளர்களாக லயன்ஸ் சங்க முன்னால் ஆளுநர்கள் டாக்டர் சாரதாமணி பழனிசாமி,ராம்குமார்,கருணாநிதி,இந்திய மருத்திவ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் டாக்டர் கோசல் ராம், டாக்டர் பரமேஸ்வரன்லயன்ஸ் சங்க முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர்,இரண்டாம் துணை நிலை ஆளுநர் செல்வராஜ்
ஜி ஏ டி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சூரிய நந்தகோபால்
,ஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர ஜெயகாந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் 108 மருத்துவர்கள் ஒரே மேடையில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

மேலும் அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் இல்லத்திற்கு கொண்டு விடவும். மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய், சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து மீண்டும் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லும் 102 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள், அவசர 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் என மருத்துவ சேவையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.எம்.ஜே.ஹவுசிங் லிமிடெட்
,காவேரி பிரிமியம் நிறுவனம், மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும்
என் நிலம் பில்டர்ஸ், தேஜஸ் அசோசியஸ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

விழா
ஒருங்கிணைப்பாளர்களாக
வட்டார தலைவர்கள் மோகன் ராஜ்,ஸ்ரீதர்,திவாகர்,வெங்கடேஸ்வரன் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு,பொருளாளர் தேஜஸ்வினி மற்றும் நிர்வாகிகள் ரேவதி,கீதா,திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!