திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ். இவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட பணிகளை செய்து வருகிறார்.இதில் பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்க்கை உயர்வு, பள்ளி மேம்பாடு, பள்ளியின் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சமுதாய பணிகள் செய்ததை
தொடர்ந்து நல்லாசியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர்கள் தினமான கடந்த 5 ம் தேதி சென்னையில் நல்லாசிரியர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் அந்தோனி லூயிஸ் மத்தியாசிற்கு பல்வேறு சமூகப் பணிகளை பாராட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார்.
இந்நிலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற பள்ளி தலைமையாசிரியை பாராட்டும் விதமாக இன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியர் பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தலைமையாசிருக்கு பொன்னாடை போர்த்தி மாலை மரியாதை செலுத்தி மேள தாளத்துடன் கடைவீதியில் இருந்து பள்ளி வரை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.பின்னர் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்