Skip to content
Home » புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும்…. ஸ்டாலின் பேச்சு

புதுச்சேரியிலும் திமுக ஆட்சி மலரும்…. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

புதுச்சேரி திமுக நிர்வாகி சிவக்குமார்  இல்லத் திருமண விழா இன்று நடந்தது. திருமணத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது  அவர் பேசியதாவது: புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம்.

ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திமுகவின் ஆட்சி நிச்சயம் மீண்டும் அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். நமக்குள் போட்டி இருக்க வேண்டுமே தவிர பொறாமை இருக்க கூடாது

புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும் . புதுச்சேரியில் தற்போது நடக்கும ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *