நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்போதே தேர்தல் களம் தமிழ் நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை திமுக தலைமைக்கழகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. உதயநிதி , இளைஞரணி மாநில செயலாளராக பதவியேற்றபின் நடைபெறும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி நடத்தப்பட்டது. இப்போது 2வது மாநாடு நடக்கிறது.