Skip to content
Home » திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Senthil

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக துணை முதல்வராக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியையும், துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதிக்கு இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், தொடர்பான சிறப்பு வாக்கு சாவடி முகாம் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பி.எல்.ஏ-2 நிர்வாகிகள் கழகத்தினர் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தலைமை கழகத்தின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதிக்கு பழஞ்சூர் செல்வம், லால்குடி தொகுதிக்கு ஆடுதுறை, உத்திராபதி, திருவரங்கம் தொகுதிக்கு சந்திரசேகர் ஆகிய தொகுதி தேர்தல் பார்வையாளர்களுடன் இணைந்து கழக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும்,
முரசொலியின் ஆசிரியர் மறைந்த செல்வத்துக்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்,சேர்மன் துரைராஜ்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், ராம்குமார், நாகராஜன், கமால் முஸ்தபா, இளங்கோ,
ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா அந்தநல்லூர் கதிர்வேல்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,திருச்சி மாநகர அயலக அணி அமைப்பாளர் அகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,நிர்வாகிகள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், அரவானூர் தர்மராஜன்,அயூப் கான் உள்ளிட்ட ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!