விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதில் திமுக சார்பில் நன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தொடக்கம் முதல் திமுக வேட்பாளர் முன்னணியில் இருந்தார்.20 சுற்றுகள் முடிந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி தவிர மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:
அன்னியூர் சிவா(திமுக),1,24,053
அன்புமணி(பாமக)56,296
அபிநயா(நாதக)10,602
திமுகவுக்கு 63.01% வாக்குகளும், பாமக 28.65%, நாதக 5.36% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி திமுகவினர் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்போது அதை விட 29,959 வாக்குகள் கூடுதலாக திமுக பெற்றுள்ளது.