கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தேர்தலை நடத்தினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து நேற்று மாலை தேர்தல் அதிகாரியான கலெக்டர் தேர்தல் முடிவுகளை அறிவித்தார். 11 வாக்குகள் பதிவானது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 5வது வார்டு உறுப்பினர் தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை கலெக்டர் அறிவித்தார்.