தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், 11072 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று இரவு கோவைப்புதூர் ஏ மைதானத்தில் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் அ.ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மாணவரணிச் செயலாளர் ராஜீவ்காந்தி கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவை எம்பி கணபதி பி.ராஜ்குமார், பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி, கோவை மேயர் ரங்கநாயகி. கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் , கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொண்டாமுத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வேலுமணியாகும். இந்த நிலையில் நேற்றைய விழா கோவை அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
