திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி வரும் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருட்களை தடுக்க முயற்சி செய்து வருகிறது. எனவும் கூறி தமிழகத்தில் மு க ஸ்டாலின் எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநிலச்
செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, சிவபதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.