Skip to content

சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கிறது. அப்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதே அடிப்படையில் உயர்த்தினால் தமிழகம் பாதிக்கப்படும்.  இதுபோல தென் மாநிலங்கள் அனைத்துமே பாதிக்கப்படும்.  தென் மாநிலங்களில் மக்கள் தொகை  குறைந்ததால் இந்த நிலைமை  ஏற்பட உள்ளது.

இதனை தடுப்பது குறித்து ஆலோசிக்க  7 மாநில முதல்வர்கள் மற்றும்  எதிர்க்கட்சி  தலைவர்கள் அடங்கிய கூட்டத்தை தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் வரும் 22ம் தேதி சென்னையில் கூட்டி உள்ளார். இதற்காக நேற்று ஒடிசா முன்னாள் முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.இன்று  காலை  அமைச்சர் எ.வ. வேலு,  விலசன் எம்.பி. ஆகி யோர் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்   ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி.  ஆகியோர் பெங்களூரு சென்று   கர்நாடக முதல்வர்  சித்தராமையாவை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.  இரு தலைவர்களிடமும் ,தமிழக முதல்வா்  ஸ்டாலின் கொடுத்தனுப்பிய  கடிதங்களை கொடுத்து கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.

22ம் தேதிக்கான  தென்னிந்திய தலைவர்கள்  கூட்ட ஏற்பாடுகளை  முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செய்து  வரும் நிலையில்,  மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூறும்போது,  தொகுதிகள்  மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் என கூறிஉள்ளார்.

error: Content is protected !!