Skip to content
Home » யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய  விதிகளை கண்டித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்  என்று திமுக உள்ளிட்ட  பெரும்பாலான கட்சிகள் கண்டித்து உள்ளன.

இந்த நிலையில் யுஜிசி  புதிய விதிகளை கண்டித்து  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதில் மாணவர் அணியினர், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.