மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் இந்தியமாணவர்சங்கம் , மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக மாணவரணிஅமைப்பாளர் இளையசூரியன்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு. வீரமணி ,கழக மாநில நிர்வாகிகள்
கவிதைப்பித்தன்,த.சந்திரசேகரன்,சுப.சரவணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம் , நிர்வாகிகள் தென்னலூர்பழனியப்பன்,மதியழகன்,பெ.ராஜேஸ்வரி, கருப்பையா ,அ.ரெத்தினம்,வி.பி.ரெங்கராஜ்,சாத்தையா,மணிவேலன், பழனிவேலு ,
மணிமாறன்,தெய்வானை, அரங்கநாயகம்,
கண்மணிசுப்பு, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இந்தியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். முன்னதாக டவுன்ஹாலில்இருந்துபேரணியாகப்புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர்.