திமுக பேச்சாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள ஓட்டல் அகார்டில் நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி தலைமை தாங்குகிறார். இன்னொரு கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் வரவேற்கிறார். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளை வகுத்திட இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் திமுக பேச்சாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி தலைமை கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.