Skip to content
Home » திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

  • by Authour

சென்னையில் தி.மு.க., செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

* பார்லிமென்டில் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம்.

* பேரிடர் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல், தமிழக மக்களை வஞ்சிப்பதற்கு கண்டனம். .

* தமிழக அரசு கோரிய ரூ.6,675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் .

* ஜனநாயகத்துக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல் .

* பெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

* பெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு, தமிழகத்திற்கு போதுமான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர். தி.மு.க., அரசின் சாதனைகளை போர்ப் பரணி பாட வேண்டும் .

* தமிழகத்தில் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கண்டனம்.

* கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பேரறிவுச் சிலையாக போற்ற வேண்டும்.

* மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதற்கு கண்டனம்.

* கனிம சுரங்கச் சட்டத்தை ஆதரித்த அ.திமு.க.,வுக்கு கண்டனம். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம்.

* இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.