தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் கோவையில் நடைபெற்றது. மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர்
சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் நேர்காணலை நடத்தினர். ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் வருங்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவர் அணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.