தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பாபநாசம் பேரூர் திமுக அலுவலகம் அருகில் நடந்த விழாவில் பொங்கல் வைத்து வழி படப் பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி, மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர் தமிழ் வாணன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அறிவழகன், பாவை அனிபா, சின்ன உதயா, நவநீத கிருஷ்ணன், இளைஞரணி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.