நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மணப்பாறை திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் என்பவர் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். கருமண்டபம் செக் போஸ்ட் அருகில் அவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் . அப்போது அவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:திமுக அதிரடி