தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், மாவட்டப் பிரதிநிதி மனோகரன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கல்யாண சுந்தரம், பேச்சாளர் விஜயா பேசினர். இதில் மயிலாடு துறை எம்.பி ராமலிங்கம், மாவட்ட துணைச் செயலர் அய்யா ராசு, மாநில அயலக அணி நிர்வாகி விஜயன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், வக்கீல் வெற்றிச் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். அய்யம் பேட்டை பேரூர் துணைச் செயலர் குமரன் நன்றி கூறினார்.
