தமிழ்நாடு கவர்னர் ரவி, சட்டமன்றத்தில் பேசும்போது தமிழ்நாடு என்பதையும், தலைவர்கள் பெயரையும், தவிர்த்ததுடன், தன் இஷ்டப்படி சில வார்த்தைகளை பேசினார். அத்துடன் சட்டமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார். தொடர்ந்து அவர் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கவர்னரின் செயல்பாடு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு அறிவுரை வழங்க வேண்டும், அவர் அரசியல் சாசனத்தை மீறி செயல்படுகிறார். என வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இன்று டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். டிஆர் பாலு, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.