தஞ்சை மாவட்டம், திமுக சார்பில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம் சாலியமங்கலம் அருகே உடையார்க் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தொகுதிப் பார்வையாளருமான மதிவாணன் தலைமை வகித்துப் பேசினார். எம்.பி க் கள் சண்முகம், ராமலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பாபநாசம் சுமதி, அம்மாப் பேட்டை கலைச் செல்வன் முன்னிலை வகித்துப் பேசினர். ராஜ்ய சபா எம்.பியும், மாவட்டச் செயலருமான கல்யாண சுந்தரம் சிறப்புரையாற்றினார். இதில் திமுக மாவட்ட மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், மாநில அயலக அணி நிர்வாகி விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், அம்மா ப் பேட்டை வடக்கு சுரேஷ், தெற்கு குமார், பேரூர் செயலர்கள் பாபநாசம் கபிலன், அய்யம் பேட்டை துளசி அய்யா, மெலட்டூர் சீனு, அம்மாப் பேட்டை ரமேஷ், சுவாமி மலை பாலசுப்பிரமணியன், மீனவர் அணி நிர்வாகி புகழேந்தி, மாவட்ட இளைஞரணி நிர்வாகி மணி கண்டன், கலை, இலக்கிய அணி நிர்வாகி முபாரக் ஹுசைன், சுற்றுச் சூழல் அணி நிர்வாகி கார்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.