ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மதியம் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா அறிமுகம் ஆகும் நிலையிலேயே அதனை எதிர்த்து பேச அனுமதி கேட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு ஆகியோர் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். இதுபோல மற்ற எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்க தயாராகி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகள் இன்று அனைத்து எம்.பிக்களும் அவைக்கு வரும்படி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.