பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தும்.
இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட தி்முக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.