மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதையொட்டி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்திமுக எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார். இதற்காக திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அனைத்து எம்.பிக்களும் பங்கேற்றனர். கவர்னர் ரவி தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வளர்ச்சியை தடுக்கிறார். கவர்னரிடம் வரும் கோப்புகள், மசோதாக்களில் கையெழுத்திட உரிய கால நிர்ணயம் செய்ய வேண்டும். கவர்னர் பதவிக்கான கண்ணியத்தை காத்திட நடத்தை விதிகள் வகுக்க வேண்டும்.
அரிட்டாப்பட்டியில் வர இருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்த அழுத்தம் கொடுத்த முதல்வருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி
வக்பு சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்ய துடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்.
5370 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை பிரதமர் மோடி உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
யுஜிசி புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 6ம் தேதி டில்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.