தெங்கு மராடா மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்துகள் கேடாமல்
பாதுகாக்க சொந்த பணத்தில் 50,000 மதிப்பிலான பேட்டரி உபகரணங்களை நீலகிரி எம்.பி ஆ.ராசா வழங்கினார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீலகிரி எம்.பியும் திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொதுமக்களை சந்தித்து மக்கள் குறைகேட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமராடா மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகு்க வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இருப்பு வைக்கும் வசதி இருந்தும் அதனை முறையாக பயண்படுத்த முடியாத நிலை இருந்துவந்தது
இயற்கை சீற்றங்கள் காரணமாக அடிக்கடி மின்சாரம் துன்டிக்கப்படும் போது இந்த மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது
எனவே மருத்துவமனைக்கு யூ.பி.எஸ் வசதி ஏற்படுத்த மருத்துவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நீலகிரி எம்.பி ஆ.ராசா தனது சொந்த நிதியினை அளித்து சுமார் 50,000மதிப்புள்ள இரண்டு யூ.பி.எஸ் பேட்டரிகளை மருத்துவர்களிடம் வழங்கியுள்ளார்
மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் தெங்குமரடா ஆரம்ப சுகாதார நுீஐலு மருத்துவர் அருன் பிரசாத்திடம் பேட்டரிகள் ஒப்படைக்கப்பட்டன
மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் குமரபுரம் பகுதியில் கடந்த முறை மழையால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு தலா 10,000நிதியுதவியையும் ஆ.ராசா வழங்கினார்