நாளை காலை 11 மணிக்கு 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்து கூட்டத்தில் அலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாது பங்கேற்கும்படி அரசு கொறடா ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது
- by Authour
