கூட்டத்தில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அமைச்சர் மகேஷ் முன்னிலையிலேயே அவரை சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார். அவர் பேசியதாவது:
அமைச்சர் அன்பில் மகேஷும் எங்களிடம் கலந்து பேசுவதில்லை. ஒரு மணி நேரத்தில் 10 நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு வருகிறார். அவரை வரவேற்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பல மணி நேரம் நிர்வாகிகள் காத்து கிடக்கின்றோம்.
அதனைத் தொடர்ந்து பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோ, சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாரை உட்கார் என ஒருமையில் பேசவே கோபமான எம்.எல்.ஏ. அசோக் குமார் நீங்க மதிமுகவிலிருந்து வந்தவர் நீங்க உட்காருங்க என பதிலுக்கு பேச பெரும் சலசலப்பு ஏற்பட்டது.இதனால் அசோக்குமார் ஆதரவாளர்களும், பழனிமாணிக்கம் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபடும் நிலையில் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.
என்ன செய்வது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒன்றும் புரியாமல் மேடையில் பதற்றத்துடன் காணப்பட்டார்.
அதற்கு பின்னர் பேசிய அமைச்சர் மகேஷ், மாவட்ட செயலாளர்கள் கூறும் பரிந்துரைகளை முடிந்தவரை சட்டத்திற்கு உட்பட்டு செய்து கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் கருத்துக்களை நான் உள்வாங்கி கொள்கிறேன். நான் பொறுப்பு அமைச்சர் என்பதால் தான் பெரும்பாலும் அனைவரையும் பார்ப்பதில்லை. இனி அதை சரி செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சரிடம் நாங்களும் கட்சி செயல்பாடுகள் குறித்து உரையாட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அதிகாரிகள் அமைச்சரை ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதால் தான் சிக்கல் ஏற்படுகிறது.
பொதுமக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தான் தெரியும். அமைச்சரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று உரையாட கூட முடியாமல் போய்விடுகிறது. இதுகுறித்து அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். கட்சிக்காரர்கள் பிரச்னைகள் அமைச்சருக்கு தெரிய வேண்டும். காரில் வந்தோம், போனோம் என்றால் நாளை மக்களவை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் போகமாட்டார். இங்குள்ள நிர்வாகிகள் நாங்கள் தான் செல்ல வேண்டும். அதனால் மக்கள் பிரச்னையை பேசினார் என்றனர்.