மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை திருவள்ளூர் செல்ல இருக்கிறார். இந்நிலையில் திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றிருந்தார். ஆய்வு செய்த பின்னர் உட்கார வந்து பார்த்தபோது ஒரு சேர் மட்டும் தான் இருந்துள்ளது. அப்போது நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபம் அடைந்தார். திடீரென அமைச்சர் நாசர் கல்லை தூக்கி திமுக தொண்டர்கள் மீது வீசி எறிந்தார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.