தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பாபநாசம் பேரூர் செயலர் சீனு தலைமையில் நடந்த உறுப்பினர் சேர்க்கையில் 250 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.