கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல பெண் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டதன் அடிப்படையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சோனியாவும் பிரியங்காவும் தமிழ்நாட்டில் ஒரே நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது. பிரியங்கா காந்தி தமது உரையை தொடங்கும் போது “நீங்கள் தான் என் தாய் நீங்கள் தான் என் சகோதரிகள்” என தமிழில் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் 32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க வந்தேன். சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டு இருந்தார். நானும் என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விளக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தி இருந்தது என்றார். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் தொடர்பான கருத்துக்களும் பேச்சும் எழுபப்படும் போதெல்லாம் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே கருத்து மோதல்கள் ஏற்படும். அந்த வகையில் பிரியங்காவின் இந்த பேச்சு திமுகவை சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் செய்தி வௌியீட்டு வருகின்றனர்.. காங்கிரசோ தமிழக பெண்கள் எத்தகைய ஆறுதலாக தங்களுக்க இருந்தார்கள் என்பதனை குறிப்பிடவே பிரியங்கா அந்த கருத்தினை கூறினார் மற்றபடி இதில் அரசியல் இல்லை என்கி்ன்றனர்..