திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக கல்வெட்டுடன் அமைக்கப்பட்டு இருந்தது .
இதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பானு முருகேசன் என்பவர் திருவாசி பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார் இவர் கடந்த 29ஆம் தேதி இரவு ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அங்கிருந்த திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளார் . இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினரும்
வழக்கறிஞருமான திவாகர் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து 100 க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருவாசி திமுக கிளைச் செயலாளராக 40 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் ராம்ராஜ் பட்டியதாரர் உடனடியாக இரண்டு கொடிக்கம்பங்களையும் நட்டு வைத்தார். கொடிக்கம்பங்கள் அகற்றிய அமமுக பஞ்சாயத்து தலைவர் பாலு முருகேசன் மீது வாத்தலை காவல் நிலையத்தில் திமுக உறுப்பினரும் திமுக வழக்கறிஞருமான திருவாசி திவாகர் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரில் எந்தவித அறிவுறுத்தாலும் இல்லாமல் கொடி கம்பத்தை அகற்றி கிராமத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பஞ்சாயத்து தலைவரின் செயல் உள்ளதாக குறிப்பிட்டு பானு முருகேசன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார் . திமுக மற்றும் மதிமுக கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.