கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் Er.ஜே.ஜாண்லீபன் இல்லத் திருமண விழா இன்று கன்னியாகுமரி மாவட்டம் சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு, மணமக்கள் ஜே.சுபிக் ஷா, ஜி.ஆஷ்லின் பிரவீன் ஆகியோரை வாழ்த்தினார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் (முன்னாள் எம்.பி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.