மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மாட்டோம் என மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். இன்று தமிழக முதல்வருக்கு அவர் எழுதி உள்ள கடிதத்திலும் இதையே வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பாக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும் மறைமுக இந்தி திணிப்பை எதிர்த்தும் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திமுக மாவட்டத் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பா .வரதராசன் தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், சிவக்குமார் ஆகியோருடன் மகளிர் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு இந்தி திணப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.