நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் தலைமையில் திமுக மாவட்ட அமைப்பாளர் தாசபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் மணிவாசகம், துணை அமைப்பாளர்கள் சோமசுந்தரம், லட்சுமணன் , செல்வகுமார் மற்றும் திமுக வழக்கறிஞர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இதில், இந்திய மக்களாகிய நாம் இறையாண்மையும் இந்திய நாட்டின் சமதர்மமும் சமய சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல், நீதி பெறவும், தனி மனித எண்ணம் அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரம் ,சமுதாய படிநிலை, வாழ்க்கை நலம் இவற்றில் சமத்துவம், ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,அவர்கள் அனைவரையும் தனிமனித மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இவற்றை உறுதிப்படுத்தும் சகோதரத்துவத்தை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையவராய், நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் 1949 நவம்பர் 26 ம் நாளாகிய இன்று இங்கு இதனால் இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றிய நமக்கு நாமே வழங்கி அதன் வழி ஒழுகிட ஒப்புக் கொள்கிறோம். அன்பு, மற்றும் சமத்துவம் நிறைந்த இந்தியாவை உருவாக்கி அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாம் உளமாற உறுதி ஏற்பதாக தெரிவித்தனர்.