Skip to content
Home » திருச்சி திமுகவின் கோட்டை……நடிகர் கமல் பேட்டி

திருச்சி திமுகவின் கோட்டை……நடிகர் கமல் பேட்டி

  • by Authour

நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன் – திருச்சியில் கமல்ஹாசன் பேட்டி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  வேட்பாளராக  மதிமுகவைச் சேர்ந்த துரைவைகோ போட்டியிடுகிறார். இவருக்க தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  துரை வைகோவை ஆதரித்து  திருச்சியில் இன்று மாலை  மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம்  செய்கிறார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு  இருந்து  கமல் பிரசாரத்ததை தொடங்குகிறார். அவருடன் வேட்பாளர்  துரைவைகோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  உடன் செல்கிறார்கள்.

இதற்காக சென்னையில் இருந்து  இன்று விமானம் மூலம் திருச்சி வந்த கமல்ஹாசனை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மற்றும் கட்சியினர் அவரை திரளாக வரவேற்றனர். பின்னர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ரொம்ப சிறப்பாக உள்ளது.இந்தியாவில் பழைய கோட்டைகளில் ஒன்று
செங்கோட்டை .பாரத பிரதமர் யாராயிருந்தாலும் அங்கு இருந்து தான் பேசுவார்கள், அதற்கும் மூத்தது இந்த செயின்ட்ஜார்ஜ் கோட்டை, இரண்டுக்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அந்த கோட்டை DMK கோட்டையாக உள்ளது. அந்த கோட்டையில் எனக்கு கதவுகள் திறந்து இருக்கிறது.நான் வந்திருக்கிறேன். நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன்.

திருச்சி திருப்பு முனை என்ற கூறுவார்களே என்ற கேள்விக்கு?

மிகையான வார்த்தை அல்ல,
நேர்மையான நம்பிக்கை என்று கமல் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *