தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் தின கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், விழாவிற்கு வந்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள். பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார். திராவிட இயக்கத்தின் பேதமே ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதாகும். பெரியார் வழி வந்த அண்ணா, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல. உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது. ஆணாதிக்க மனோபாவம் குறைய வேண்டும் என கூறினார்.